ADDED : ஆக 07, 2024 10:36 PM
திருமங்கலம்:மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த முகமது ரியாஸ், 24, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பேரையூரில் ஹோட்டலில் வேலை செய்தார். அப்போது, ஹோட்டலுக்கு எதிர் வீட்டை சேர்ந்த உமாதேவியை காதலித்தார். இதற்கு இரு விட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நண்பர்கள் சிலம்பரசன், பெத்த மணி உதவியோடு திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகின்றனர்.
திருமணத்தின் போது உமாதேவி தன் வீட்டில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் 15 லட்சம் ரூபாய் மற்றும் 55 சவரன் நகைகளை எடுத்து வந்தார். இதில் தங்களது செலவுக்காக, 2 லட்சம் ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவற்றை நண்பர்கள் சிலம்பரசன், பெத்தமணியிடம் கொடுத்துள்ளனர். சில நாட்களுக்கு முன், சொந்த ஊருக்கு வந்த முகமது ரியாஸ் நண்பர்களிடம் தான் கொடுத்த பணம், நகையை கேட்டார். அவர்கள் தர மறுத்தனர். இதையடுத்து அவர் அளித்த புகாரின்படி, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.