ADDED : மே 28, 2024 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை சந்தைப்பேட்டையில் 'சாம்பியன்ஸ் கார்ட்ஸ்' என்ற பெயரில் திருமண பத்திரிகை, கவர் தயாரிக்கும் கம்பெனி இருந்தது. இதன் நிர்வாகிகளாக கருணாகரன், மணிகண்டன், ரமா, தேனி பாண்டியராஜன், சிவகாமி இருந்தனர். தங்கள் கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினர். இதை நம்பி பலரும் முதலீடு செய்து ஏமாந்தனர். ரூ.பல லட்சம் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தபால்தந்தி நகரில் உள்ள தங்கள் அலுவலகத்தில் நேரில் மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 0452 - 256 2626ல் தொடர்பு கொள்ளலாம்.