/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரி மாணவர்களுக்கு இலவச வங்கிப் பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு இலவச வங்கிப் பயிற்சி
ADDED : ஆக 22, 2024 02:53 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் இயங்கி வரும் நேஷனல் இன்ஸ்டிடியூட் நிறுவனம், நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில், 78 கல்லுாரி மாணவர்களுக்கு இலவச வங்கி தேர்வு பயிற்சியை வழங்க உள்ளது.
இதுகுறித்து நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: இப்பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு செப்.,1, காலை 11:00 மணிக்கு நிறுவன வளாகத்தில் நடத்தப்படும். அதில் தேர்வாகும் மாணவர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மாதம் இலவச பயிற்சி நேரடியாக நிறுவனத்தில் வழங்கப்படும்.
இத்தேர்விற்கு முன்பதிவு செய்ய 95666 59484 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பெயர், முகவரி, அலைபேசி எண், கல்லுாரியின் பெயர், படிக்கும் ஆண்டு, பாடப்பிரிவு ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும். ஆக., 29 கடைசி நாள் என்றார்.