ADDED : மார் 22, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மார்ச் 31ல் முடிவடையும் பஸ்பாஸை புதுப்பிக்க முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால் முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே பஸ்பாஸை ஜூன் 30 வரை பயன்படுத்த அனுமதிக்கும்படி அறிவுறுத்தி மாற்றுத்திறனாளிகள்நல இயக்குனரால் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாஸையே தொடர்ந்து ஜூன் 30 வரை பயன்படுத்தலாம் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

