ADDED : ஜூன் 30, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மடீட்சியா, இந்தியத்தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் குறு, சிறு தொழில்முனைவோருக்கான இலவச வணிக மேம்பாட்டு பயிற்சி மதுரை மடீட்சியா ஹாலில் ஜூலை 3, 4ல் நடக்கிறது.
விற்பனையை அதிகரிப்பது, சிறந்த வணிக உத்திகள், செயல்பாடுகள், திறமையான குழு மேலாண்மை, பணப்புழக்கத்தை சீரமைப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கற்றுத்தரப்படுகிறது. முன்பதிவு அவசியம். அலைபேசி: 96594 69593.
