ADDED : மே 07, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கருணை இல்லத்தில் தங்கி சுந்தராஜா துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயில ஆதரவற்ற, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள 5 முதல் 14 வயது சிறுமிகளுக்கு கோயில் அலுவலகத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. படிப்புச்செலவு, உணவு, சீருடைகள் அனைத்தும் இலவசம் என துணைக்கமிஷனர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்கு தலைமையாசிரியர் செல்வராஜ், இல்ல காப்பாளர் தீபலட்சுமியை 98421 95016ல் தொடர்பு கொள்ளலாம்.