ADDED : ஜூலை 04, 2024 01:36 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வேளாண் விரிவாக்க மைய பகுதி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்க திட்டத்தில் விவசாயிகளுக்கு தேக்கு, வெண்தேக்கு, மகாகனி, குமிழ், வேங்கை, மலை வேம்பு போன்றவை ஏக்கருக்கு 160 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வயல் வரப்பு ஓரம், தரிசு நிலங்களில் மரக்கன்று நடவு செய்யலாம். அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் டேவிட் புஷ்பராஜ் 70104 80452, நாகமலை புதுக்கோட்டைக்கு மனோகரன் 90804 38859, அவனியாபுரம் மீனா 96299 45002, வலையங்குளம் செல்வகுமார் 89409 00057, விராதனுார் சேகர் 99433 84410 மற்றும் திருநகரில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்திலும் முன்பதிவு செய்யலாம் என உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.