ADDED : மே 29, 2024 04:46 AM
அ நிறம் | அளவு
மதுரை : மத்திய, மாநில அரசின் நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பெட்கிராட் நிறுவனத்தில் மகளிருக்கான 3 மாத கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
குறைந்தது 8வது தேர்ச்சி பெற்ற 45 வயது வரையுள்ள ஏழைப்பெண்கள் பங்கேற்கலாம். சிறுபான்மை, எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினருக்கு முன்னுரிமை. ஆதார், கல்வி, ஜாதிச்சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், போட்டோவுடன் நேரில் அணுகலாம். அல்லது 89030 03090ல் தொடர்பு கொள்ளலாம்.
