ADDED : ஜூலை 07, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் உள்ள மதுரை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் பெண்களுக்கான ஆறு வார கால இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கவுன், ஜாக்கெட், சுரிதார், நைட்டி, ஸ்கர்ட் தைக்க கற்றுத் தரப்படும். போட்டோ, கல்வித்தகுதி சான்றிதழ் நகல், எஸ்.சி., எஸ்.டி., யாக இருந்தால் ஜாதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகலுடன் நேரில் பதிவு செய்ய வேண்டிய முகவரி: எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் எதிரில், மதுரை. விபரங்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.
