ADDED : மே 10, 2026 05:20 PM
மதுரை, மே 11–
மதுரை கே.புதுாரில் அழகர்கோயில் ரோடு – ரேஸ்கோர்ஸ் ரோடு சந்திப்பு எதிரே மாநகராட்சியின் மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. இங்கு மனவளர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு இலவச கோடைகால சிறப்பு முகாம் (சம்மர் கேம்ப்) மே 13 முதல் 23 வரை காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.
ஆரோக்கிய வெல்பேர் டிரஸ்ட், மதுரை குரூப் லிவிங் பவுண்டேஷன் சார்பில் நடைபெறும் இம்முகாமில் களிமண்ணில் கலைப்பொருள் தயாரித்தல், கிராமிய விளையாட்டுகள், இசைப்பயிற்சி, ஓவியம், படைப்பாற்றல் திறன், தோட்டம் உருவாக்குதல், கதை சொல்லுதல் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
அவர்களின் பெற்றோருக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு, யோகா, தியானம், தனிநபர், குழு கவுன்சிலிங், தொழிற்பயிற்சி, சிறப்பு கல்வி குறித்த விழிப்புணர்வு அளிக்கப்படும். தொடர்புக்கு: 94434 74424.
