ADDED : மே 25, 2026 06:42 PM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எய்ம்ஸ் மருத்துவமனை மெயின் ரோடு, ஆஸ்டின்பட்டி அரசு நெஞ்சக மருத்துவமனை எதிரில் உள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஜூன் 11 முதல் 31 நாட்களுக்கு ஆயத்த ஆடைகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் முகாமில் 18 முதல் 50 வயதுள்ள பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்குப் பின், அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் ஜூன் 10க்குள் அலைபேசி எண் 94456 00561ல் முன்பதிவு செய்யலாம். பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம். கிராமப்புற நபர்கள், 100 நாட்கள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக்கு வருவோர் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
