ADDED : செப் 02, 2024 06:13 AM
திருப்பரங்குன்றம் : இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் சார்பில் இலவச சிறுதானிய உணவு வகைகள், பாரம்பரிய உணவுகள், பத்திய உணவு பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி பழங்கள் பதப்படுத்துதல் குறித்த இலவச பயிற்சி முகாம் திருநகரில் விரைவில் துவங்க உள்ளது.
பயிற்சியில் ரெடி டு மிக்ஸ், குழம்பு வகைகள், தொக்குகள், பிரியாணி பவுடர், தக்காளி, லெமன் சாதம் பவுடர், ஹெல்த் மிக்ஸ், கீரை பதப்படுத்துதல், ரெடி மிக்ஸ் சாம்பார் உட்பட உணவுப் பொருள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும்.
தொழில் துவங்க எஸ்.எஸ்.ஐ., சான்றிதழ், மாவட்ட தொழில் மையம் மூலம் இலவசமாக பெற்றுத் தரப்படும். மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வங்கி கடன் பெற உதவி செய்யப்படும்.
திட்ட அறிக்கை தயார் செய்தல், சந்தைப் படுத்துதல், தொழில் முனைவோராக மாற தலைமை பண்புகள், தொழில் யுக்திகள் பற்றிய சிறப்பு வகுப்புகள் நடைபெறும், பெண்களுக்கு 26 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியில் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
விரும்புவோர் 89030 03090ல் முன்பதிவு செய்யலாம் என பெட்கிராட் பொருளாளர் சாராள்ரூபி தெரிவித்தார்.