ADDED : ஏப் 02, 2024 06:24 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையம் சார்பில் பால்பண்னை பராமரிப்பு, மண்புழு உரம் தயாரித்தல் இலவச பயிற்சி முகாம் ஏப்.,15ல் துவங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் இம்முகாமில் இருபாலர்கள், திருநங்கைகள் பங்கேற்கலாம்.
அரசு சான்றிதழ், உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். ஏப்.,14க்குள் 94456 00561ல் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு நகல் கொண்டு வர வேண்டும். நுாறு நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராச்சாரி தெரிவித்தார்.
