ADDED : ஏப் 02, 2024 06:25 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் பங்குனி தமிழாண்டு நிறைவு பவுர்ணமி வழிபாட்டில் ஜோதி நாராயணர் சிறப்பு பூஜை நடந்தது.
பீஷ்மர், ஆதிசங்கரர் அருளிய விஷ்ணு நாம பதிகம், ஆழ்வார் பாசுரங்கள், கவுசிக முனிவர் அருளிய ஸ்ரீ ராமரக்ச சுலோக பதிகம், வள்ளலார் அருளிய ஸ்ரீராமநாம பதிகம் பாராயணம் செய்யப்பட்டது. நாட்டில் நல்லாட்சி மலரவும் சுபிட்சம் தழைக்கவும் சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் வழிபாட்டை நடத்தினார். ரத்னேஸ்வரி ஆராதனை செய்தார்.
