ADDED : ஏப் 30, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சமயநல்லுார் அருகே அதலையில் வீரஜக்கதேவி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 70 ஆண்டுகளுக்கு பின் சித்ரா பவுர்ணமி பூஜை உற்ஸவ விழா நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு பல்வகை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வீரஜக்கதேவி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கொண்டுவந்த படையல், காணிக்கை அம்மனுக்கு படைக்கப்பட்டது. ராமலிங்க சுவாமி சமாதி மடத்தின் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
