ADDED : மே 11, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் சங்கம் முயற்சியில் 500 கிலோ மட்கா குப்பை வீடுகளில் இருந்து சேகரித்து விருதுநகர் குப்பை வங்கிக்கு மறு சுழற்சிக்காக அனுப்பப்பட்டது.
கவுன்சிலர் கார்த்திகேயன் முன்னிலையில் கோமதிபுரம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் ராகவன், செயலாளர் பழனிக்குமார், உதவிப் பொருளாளர் ரகுபதி கலந்து கொண்டனர். சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வித்யா, சரஸ்வதி, அனுராதா உடனிருந்தனர்.