ADDED : ஜூலை 07, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி,: வாடிப்பட்டி வட்டார வேளாண் துறை சார்பில் அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் காடுபட்டியில் கிராம வேளாண் முன்னேற்ற குழு காரீப் பருவ விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வசித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர் மாரிச்செல்வம் வேளாண் மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒரு துளி அதிக பயிர் செய்யும் நுண்ணீர் பாசனம் குறித்தும், ஏ.ஆர்.இ.,தொண்டு நிறுவன பயிற்சியாளர் கர்ணன் மாற்று பயிர் சாகுபடி, பந்தல் காய்கறி குறித்தும் விளக்கினர். துணை வேளாண் அலுவலர் பெருமாள், உதவி அலுவலர் விக்டோரியா செலஸ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருணா தேவி, பூமிநாதன் பங்கேற்றனர்.