/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரிமேடு அந்தோணியார் சர்ச் தேர் பவனி
/
கரிமேடு அந்தோணியார் சர்ச் தேர் பவனி
ADDED : ஜூன் 16, 2024 05:18 AM

மதுரை:மதுரை கரிமேடு அந்தோணியார் சர்ச் 134 வது ஆண்டு திருவிழா ஜூன் 3ல் துவங்கியது.
தெற்கு மறை வட்டார அதிபர் அமல்ராஜ் கொடி ஏற்றி வைத்தார். தினமும் மாலை 5:30 மணிக்கு ஜெபமாலை வழிபாடு, பல்வேறு பங்குகளை சார்ந்த அருட்தந்தையர்கள் மறையுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றினர். நேற்று ஞானஒளிவுபுரம் வளனார் சர்ச் பாதிரியார் ஜோசப், உதவி பாதிரியார் மதியழகன் தலைமை வகித்தனர்.
மதுரை உயர்மறை மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல்பாளையம் மிக்கேல் அதிதுாதர் சர்ச் பாதிரியார்வின்சென்ட் ராஜா திருப்பலி நிறைவேற்றினார். அந்தோணியார் திருவுருவம் தாங்கிய மின் அலங்கார தேர்பவனி நடந்தது. இன்று (ஜூன் 16) திருப்பலிக்குப் பின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும். நாளை (ஜூன் 17) சமபந்தி விருந்து நடக்கிறது. ஏற்பாடுகளை பாதிரியார் ஜோசப், உதவி பாதிரியார் மதியழகன், சர்ச் நிர்வாகிகள் செய்துஉள்ளனர்.