ADDED : ஏப் 10, 2024 05:42 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழக பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பேராசிரியர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். செயலாளர் பெரியதம்பி சங்க செயல்பாடுகளை அறிக்கையாக வாசித்தார். ஓய்வூதியர்களுக்கு பயன்படும் களஞ்சியம் செயலி பற்றி விளக்கினார்.
பொருளாளர் பெருமாள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் மனோகரன், தேசிய ஆசிரியர் கழக புரவலர் பார்த்தசாரதி உட்பட பலர் பேசினர்.
லோக்சபா தேர்தலுக்குப் பின் தமிழக அரசு நிலுவையில்உள்ள கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு கண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். பேராசிரியர்கள் ஜெகநாதன், சண்முகசுந்தரம், லட்சுமணன் ஏற்பாடுகளை செய்தனர்.
