நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி ஆய்வு மையத்தில் தேசிய கால்நடை இயக்கம் சார்பில் ஆடு வளர்ப்பு, பண்ணை அமைக்க அரசு சான்றிதழுடன்கூடிய ஒரு நாள் பயிற்சி முகாம் ஜூன் 12ல் நடக்கிறது. இச்சான்றிதழ் பெறுபவர்களுக்கு வங்கிக் கடனில் முன்னுரிமை, 50 சதவீத மானியம் வழங்கப்படும்.
பதிவு செய்வோர் மட்டுமே பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் 0452 - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம் என தலைவர் சிவசீலன் தெரிவித்தார்.