ADDED : ஏப் 28, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, :  தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,770 க்கு விற்கப்பட்டது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஏப்., 27) சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ.54,160-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ.15 அதிகரித்து ரூ.6,770-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம்(ஏப்.26) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,755-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் வெள்ளி விலை நேற்று மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.87,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

