/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., பொறுப்பாளருக்கு அரசு ஊழியர்கள் கண்டனம்
/
தி.மு.க., பொறுப்பாளருக்கு அரசு ஊழியர்கள் கண்டனம்
ADDED : மார் 01, 2025 04:16 AM
மதுரை : அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயாலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தர்மசெல்வன் கட்சி நிர்வாகிகளிடம் பேசுவது போல் வெளியான வீடியோவில், கலெக்டர், எஸ்.பி., உட்பட அனைத்து அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். அவரைக் கேட்காமல் எந்தப் பணியும் செய்யக் கூடாது எனக் கட்டளையிடும் தொனியில் பேசியது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையில் எது நடந்தாலும் தனக்குத் தெரிவிக்க வேண்டும், இல்லாவிடில் நடப்பதே வேறு என பேசியது ஆணவத்தின் உச்சம். அவர் வானத்தில் இருந்து குதித்தவர் போலவும், அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதையும் கண்டிக்கிறோம்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை நினைத்து அதிருப்தியில் இருக்கும் நிலையில், ஆளும்கட்சி பொறுப்பாளர் இவ்வாறு பேசியது ஆட்சியாளர்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம். முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.