ADDED : மே 30, 2024 03:39 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
களஞ்சியம் 2.0 செயலி வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வருமான வரியை எவ்வித வரைமுறையும் இன்றி பிடித்தம் செய்வதாகக் கூறி, அந்நடைமுறையை கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து கடந்த மாதமே கடிதம் வழங்கியும் அதே நடைமுறையை தொடர்கின்றனர். எனவே அரசின் கருவூல கணக்குத்துறையை கண்டித்து அந்த அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் முனியசாமி, மனோகரன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.