/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மோட்டார் வண்டி பராமரிப்பு தொழிலாளர் 'அஞ்சலட்டை இயக்கம்'
/
அரசு மோட்டார் வண்டி பராமரிப்பு தொழிலாளர் 'அஞ்சலட்டை இயக்கம்'
அரசு மோட்டார் வண்டி பராமரிப்பு தொழிலாளர் 'அஞ்சலட்டை இயக்கம்'
அரசு மோட்டார் வண்டி பராமரிப்பு தொழிலாளர் 'அஞ்சலட்டை இயக்கம்'
ADDED : ஜூலை 01, 2024 05:30 AM
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் வேலை அறிக்கையையும், பொருளாளர் புகழேந்தி நிதி அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.
மாநில செயலாளர் சவுந்திரராஜன், அரசு ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர்கள் முருகபெருமாள், குமாரவேல், மாநில பொருளாளர் அண்ணாதுரை பங்கேற்றனர்.
அரசால் அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள துவக்கநிலை தொழில்நுட்ப பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மூன்றாண்டுகளாக தொழிலாளர்கள் பதவி உயர்வை முடக்கி வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவிப்பது, அனைத்து பதவி உயர்வு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து தொழில்நுட்ப பதவிகளுக்கும் நிரந்தர பணி விதிகளை உருவாக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7ல் கோரிக்கை அட்டை அணிந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலாளர்ஆகியோருக்கு 'அஞ்சலட்டை இயக்கம்' நடத்தி செயல்பாடுகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றினர்.