/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி
/
தேர்தல் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி
ADDED : ஏப் 18, 2024 05:26 AM
மதுரை: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 795 பெண் வாக்காளர்கள், 13 லட்சத்து 67 ஆயிரத்து 51 ஆண் வாக்காளர்கள், 271 திருநங்கையர், 5 ஆயிரத்து 468 ராணுவ வீரர்கள் என மொத்தம் 26 லட்சத்து 94 ஆயிரத்து 585 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க 1160 மையங்களில் 2751 ஓட்டுச்சாவடிகள், 2727 தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், பயன்படுத்தும் காகிதங்கள் என ஸ்டேஷனரி பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் செல்லும். ஓட்டுப்பதிவு முடிந்த பின் அவற்றை பாதுகாப்பாக ஓட்டு எண்ணும் இடமான மதுரை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு சென்று ஒப்படைப்பது மண்டல அலுவலர்களின் பணி. இதற்காக 259 பேர் நியமிக்கப்பட்டு அவர்களின் வாகனங்களிலும் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டது.

