ADDED : ஆக 25, 2024 04:56 AM

மதுரை: மதுரை லேடி டோக் கல்லுாரியில் 58வது பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார். துணை முதல்வர் நிம்மா எலிசபெத் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அகமதாபாத் முத்ரா இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேஷன்ஸ் கல்வி நிறுவனத்தின் டீன் கீதா ஹெக்டே 1468 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
அவர் பேசுகையில், ''வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகிற்கு ஏற்ப மாணவிகள் மென்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றல் திறனில் மேம்பட்டவர்களாகவும் அற உணர்வு உடையவர்களாகவும், சவால்களை துணிவுடன் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும் திகழ வேண்டும். திறமையின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
முன்னாள் மாணவியர் கீர்த்தனா, அஞ்சலி நன்றி கூறினர். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மெர்சி பாக்கியம், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
