ADDED : ஆக 01, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஸ்ரீ சாய் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடந்தது.
நடராஜன் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் கார்த்தியாயினி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மிலன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ரோட்ன் லால்ஜி வோரா, மனிதநேயத் துறையின் முன்னாள் இயக்குநர் அப்துல் காதிர், முன்னாள் கல்லுாரி முதல்வர் சந்திரன் பங்கேற்றனர். நிறுவனத்தின் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முபீன், மஞ்சுளாதேவி செய்திருந்தனர்.
