/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் உயர்நீதிமன்றம் அனுமதி
/
கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் உயர்நீதிமன்றம் அனுமதி
ADDED : மார் 08, 2025 03:36 AM
மதுரை : சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன். ஹிந்து முன்னணி மாநில கலை, பண்பாட்டு பிரிவு நிர்வாகியாக உள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான பாடலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இரு மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர். கனல் கண்ணன்,'யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பதிவிடவில்லை. கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பதிவிட்டேன். பதிவை நீக்கிவிட்டேன். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.
நீதிபதி பி.தனபால் விசாரித்தார். அரசு தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.
நீதிபதி: முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மதுரவாயல் நகர் குற்றப்பிரிவு போலீசில் மனுதாரர் 4 சனிக்கிழமைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.