/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சங்கரன்கோவில் கோயிலில் கும்பாபிேஷகத்திற்கு தடையில்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சங்கரன்கோவில் கோயிலில் கும்பாபிேஷகத்திற்கு தடையில்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு
சங்கரன்கோவில் கோயிலில் கும்பாபிேஷகத்திற்கு தடையில்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு
சங்கரன்கோவில் கோயிலில் கும்பாபிேஷகத்திற்கு தடையில்லை; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஆக 18, 2024 05:35 AM

மதுரை : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் கும்பாபிேஷகம் நடத்த தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சங்கரன்கோவில் சங்கர் தாக்கல் செய்த மனு:இக்கோயிலில் ஆக.,23 ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது. ராஜகோபுரத்திற்கு 5 வகை வண்ணம் தீட்ட வேண்டும்.
தொல்லியல் நிபுணர்களின் உதவியுடன் சிற்பங்களில் உள்ள சேதங்களை சரி செய்ய வேண்டும். மூலிகையிலான சுவரோவியங்களுக்கு பழமை மாறாமல் வண்ணம் தீட்ட வேண்டும்.
சிதிலமடைந்த கடவுள் சிலைகள், சிற்பங்களை புனரமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஆகம விதிப்படி கும்பாபிேஷகம் நடத்த முடியாது. புனரமைப்பு பணி முடிந்த பின் கும்பாபிேஷகம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி முகமது ஷபீக் விசாரித்தார்.
அறநிலையத்துறை தரப்பு: ராஜகோபுரத்திற்கு ஒரே ஒரு வண்ணம், பிற கோபுரங்களுக்கு 5 வகை வண்ணம் தீட்டப்படுகிறது. இந்நடைமுறை ஏற்கனவே நடந்த கும்பாபிேஷகத்தின்போது பின்பற்றப்பட்டது. சுவரோவியங்களில் நிபுணத்துவம் வாய்ந்த 2 குழுக்கள் மட்டுமே உள்ளன. அவர்களை கண்டுபிடித்து உடனடியாக பணியில் ஈடுபடுத்த வாய்ப்பில்லை. கும்பாபிேஷகம் முடிந்த பின் அக்குழு மூலம் சுவரோவியங்கள் புதுப்பிக்கப்படும். கடவுள் சிலைகள் நல்ல நிலையில் உள்ளன. துாணில் சேதமடைந்துள்ள சிற்பம் தொல்லியல் நிபுணர்களின் உதவியுடன் சீரமைக்கப்படும். மூலவர் சிலை நல்ல நிலையில் உள்ளதால் கும்பாபிேஷகத்தை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: கும்பாபிேஷகம் நடத்த தடையில்லை. நிபுணர் குழு மற்றும் மனுதாரர் தரப்பில் ஆக.,28 ல் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை செப்.,2 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

