/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் தெரு நாய்களுக்கு கருத்தடை எவ்வளவு கால அவகாசம் தேவை உயர்நீதிமன்றம் கேள்வி

ADDED : ஜூலை 11, 2024 05:29 AM
மதுரை: மதுரையில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பது குறித்து மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் பாலாஜி தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ரோட்டின் குறுக்கே பாய்ந்து, வாகன விபத்தை ஏற்படுத்துகின்றன. நாய்கள் கடித்ததால் பலர் ரேபிஸ் நோய் பாதிப்பிற்குள்ளாகினர். தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். நாய்களின் இன விருத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: எத்தனை நாய்களை பிடித்து கருத்தடை செய்யப்பட்டுள்ளது, அப்பணியில் எத்தனை கால்நடை டாக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர், ரோடுகளில் சுற்றித் திரியும் ஒட்டுமொத்த நாய்களுக்கும் கருத்தடை செய்ய எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் குறித்து மாநகராட்சி கமிஷனர் தரப்பில் ஜூலை 16 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.