ADDED : மே 11, 2026 10:34 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, இண்டாக், மதுரை டிராவல்ஸ் கிளப், சுற்றுலாத்துறை, வைகை வட்டார களஞ்சியம் சார்பில் அழகர்கோவில் அருகிலுள்ள மீனாட்சிபுரம் ஓவா மலையில் பாரம்பரிய நடைபயணம் நடந்தது.
தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம், பேராசிரியர் ஓய்வு சேதுராமன் கூறியதாவது: ஓவா மலையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இம்மலையில் 5க்கும் மேற்பட்ட இயற்கையான குகை தளங்கள் உள்ளன. இவை சமண முனிவர்கள் மழைக்காலத்தில் தங்கவும், வழிபடவும் பயன்பட்டது. குகையின் முகப்பில் புருவம் போல மேடாக வெட்டப்பட்டுள்ளதால் மழைநீர் உள்ளே புகாது. குகை தளத்தின் தரைப்பகுதியில் கற்களான படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு குகை தளத்தின் முகப்பிலும் உருவாக்கியவர்களின் பெயர்கள் தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்றனர்.
