/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி: அருளானந்தர் கல்லுாரி சாம்பியன்
/
ஹாக்கி: அருளானந்தர் கல்லுாரி சாம்பியன்
ADDED : மார் 22, 2024 05:03 AM

மதுரை: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான மொந்தோ நினைவு ஹாக்கிப் போட்டி நடந்தது.
முதல் லீக் போட்டியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை 6 - 3 கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியை வீழ்த்தியது. 2வது போட்டியில் அருளானந்தர் 4 - 0 கோல் கணக்கில் சவுராஷ்டிரா கல்லுாரியை வீழ்த்தியது. 3வது போட்டியில் அருளானந்தர் கல்லுாரி 2 - 1 கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரியை வீழ்த்தியது.
4வது போட்டியில் சவுராஷ்டிரா கல்லுாரி, எஸ்.ஆர்.எம்., பல்கலை அணிகள் தலா 6 கோல் அடித்து சமன் செய்தன. 5வது போட்டியில் எஸ்.ஆர்.எம்., கல்லுாரி 3 - 1 கோல்களில் சவுராஷ்டிரா கல்லுாரியை வீழ்த்தியது. 6வது போட்டியில் அருளானந்தர் கல்லுாரி 1 - 0 கோல் கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலையை வீழ்த்தியது. அதிக புள்ளிகள் பெற்ற கருமாத்துார் கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி 2ம் இடம், எஸ்.ஆர்.எம்., கல்லுாரி 3ம் இடம், சவுராஷ்டிரா கல்லுாரி 4ம் இடம் பெற்றன.
கல்லுாரி செயலாளர் ஆண்டனிசாமி பரிசு வழங்கினார். அதிபர் ஜான் பிரகாசம், முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜ் கலந்து கொண்டனர். உடற்கல்வி இயக்குநர் வனிதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

