நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்ட பெண்கள் ஹாக்கி அணியை தேர்வு செய்வதற்கான போட்டி நடக்கிறது.
எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் செப்., 3ல் காலை 7:00 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் 2005ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் ஜூனியர் பெண்கள் அணி செப். 7 முதல் 11 வரை புதுக்கோட்டையில் நடக்க உள்ள மாநில சாம்பியன் போட்டியில் பங்கேற்பர் என மதுரை மாவட்ட ஹாக்கி சங்கம் தெரிவித்துள்ளது.