/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நான் கமிஷனர் பேசுகிறேன்... விசாரிப்பால் அதிகாரிகள் கலக்கம்
/
நான் கமிஷனர் பேசுகிறேன்... விசாரிப்பால் அதிகாரிகள் கலக்கம்
நான் கமிஷனர் பேசுகிறேன்... விசாரிப்பால் அதிகாரிகள் கலக்கம்
நான் கமிஷனர் பேசுகிறேன்... விசாரிப்பால் அதிகாரிகள் கலக்கம்
ADDED : ஆக 14, 2024 12:43 AM
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலக் கூட்டங்களில் மக்கள் அளிக்கும் புகார்கள் மீது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் தினேஷ்குமார் புகார் அளித்தவர்களிடம் போனில் விவரம் கேட்பதால் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
மாநகராட்சியில் 100 வார்டுகளை நிர்வகிக்கும் வகையில் நிர்வாக ரீதியாக 5 மண்டல அலுவலகங்களை உதவி கமிஷனர்கள் நிர்வகிக்கின்றனர். மாதம் ஒருமுறை மக்கள் குறை தீர் முகாம் நடக்கிறது. இதில் அளிக்கப்படும் புகார்கள் மீது ஒரு மாதத்திற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து அடுத்து நடக்கும் முகாமில் தெரிவிக்க வேண்டும். ஆனால் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை என புகார் எழுந்தன. குறிப்பாக மண்டல தலைவர்கள் கண் அசைவின்றி மனுக்கள் மீது தீர்வுகாண்பது மாநகராட்சி அலுவலர்களுக்கு பெரும் சவாலாக மாறியது.
இந்நிலையில் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த மண்டலம் வாரியாக அறிக்கை கேட்டு, அவற்றில் 'ரேண்டமாக' புகார்தாரர்களை தேர்வு செய்து அவர்களை போனில் கமிஷனர் தினேஷ்குமார் அழைத்து 'உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா. எந்த நிலையில் உள்ளது. அதிகாரிகள் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா' என விசாரித்து வருகிறார்.
அவர் கூறுகையில் ''புகார் மீது நடவடிக்கை இருந்தால் தான் மக்களுக்கு மாநகராட்சி மீது நம்பிக்கை ஏற்படும். அந்த வகையில் மண்டல கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையில் மண்டலத்திற்கு தலா 3 பேர் என 'ரேண்டமாக' தேர்வு செய்து விசாரிக்கிறேன். பொய் அறிக்கை என தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.