/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛'ரோஸ் மில்க்' விரும்பியா நீங்கள் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
/
‛'ரோஸ் மில்க்' விரும்பியா நீங்கள் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
‛'ரோஸ் மில்க்' விரும்பியா நீங்கள் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
‛'ரோஸ் மில்க்' விரும்பியா நீங்கள் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
ADDED : மே 03, 2024 05:54 AM
மதுரை: மத்திய அரசு அனுமதிக்காத 'ரோடமைன் பி, பாஸ்ட் ரெட்' நிறங்களை பயன்படுத்தி ரோஸ் மில்க் தயாரித்தால் நடவடிக்கை பாயும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: ரோஸ் மில்க் குளிர்பானத்தில் எரித்ரோமைசின், கார்மோய்சைன், பான்சீ 4 ஆர் போன்ற நிறமிகள் சேர்க்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதுவும் ஒரு கிலோவுக்கு 50 முதல் 120 மில்லிகிராம் வரையே சேர்க்க முடியும். ஒவ்வொரு நிறமிக்கும் அளவு மாறுபடும். இந்த அளவைத் தாண்டி கூடுதலாக நிறமி சேர்த்தாலும் தவறு தான். அதேபோல 'ரோடமைன் பி, பாஸ்ட் ரெட்' நிறமிகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்துவது தெரிந்தால் கடைக்கு 'சீல்' வைப்பதோடு அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் ரோஸ் மில்க் குடிக்கும் போது கண்ணைப்பறிக்கும் 'பளிச்'சென்ற நிறத்தில் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் செய்யலாம் என்றார். வாட்ஸ் ஆப் புகார் எண் : 94440 42322.