/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் 2650 ஏக்கர் நெற்பயிர் சேதம் செல்லம்பட்டியில் பாதிப்பு அதிகம்

ADDED : மே 24, 2024 02:45 AM
மதுரை: மதுரை செல்லம்பட்டியில் பெய்த மழையால் 933.65 எக்டேர் பரப்பிலான நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 15 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் மழையால் மதுரை மாவட்டத்தில் கோடைகால நெற்பயிர்கள் கதிர்முற்றும் நேரத்தில் பாதிப்படைந்துள்ளன. மதுரை கிழக்கில் 1.38 எக்டேர், திருப்பரங்குன்றத்தில் 10, கொட்டாம்பட்டியில் 0.80, வாடிப்பட்டியில் 17.49, கள்ளிக்குடியில் 5, திருப்பரங்குன்றத்தில் 8.4, உசிலம்பட்டியில் 14.2, சேடபட்டியில் 78.9, செல்லம்பட்டியில் அதிகளவாக 933.65 எக்டேர் பரப்பிலான நெற்கதிர்கள் மழையால் பாதிப்படைந்தன.
கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் பகுதியில் நெற்கதிர்கள் மழையில் சாய்ந்து முளைக்கத் தொடங்கி விட்டன. இதனால் 953 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 3 எக்டேரில் மக்காளச்சோள பயிர்களும் சாய்ந்தன. மே 22 வரையான பாதிப்பு 1072.82 எக்டேர். தொடர்ந்து மழை பெய்வதால் பாதிப்பு அதிகரிக்கலாம். சேதமதிப்பீடு கணக்கெடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை இழப்பீட்டு நிதியிலிருந்து நிவாரணம் வழங்கப்படும் என்றார்.