/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் ஆக. 2ல் துவங்குகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி; அதகள 'ஆபரில்' பொருட்களை அள்ள தயாராகுங்க மக்களே
/
மதுரையில் ஆக. 2ல் துவங்குகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி; அதகள 'ஆபரில்' பொருட்களை அள்ள தயாராகுங்க மக்களே
மதுரையில் ஆக. 2ல் துவங்குகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி; அதகள 'ஆபரில்' பொருட்களை அள்ள தயாராகுங்க மக்களே
மதுரையில் ஆக. 2ல் துவங்குகிறது தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி; அதகள 'ஆபரில்' பொருட்களை அள்ள தயாராகுங்க மக்களே
ADDED : ஜூலை 26, 2024 12:40 AM

மதுரை : ஒன்றா, இரண்டா, நான்கு நாட்கள் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தென் மாவட்ட மக்களை திணறடிக்க போகும் தினமலர், சத்யா இணைந்து வழங்கும் தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024 வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி ஆக.,2ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்குகிறது.
ஒரே இடத்தில் வீடு, அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை ஆசை ஆசையாய் வாங்கலாம் என மக்களிடம் ஆர்வம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் மதுரையில் கனவாகவே உள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்த ஆரவார வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியை நடத்துகிறது தினமலர்.
குட்டீஸ்கள் முதல் பாட்டிகள் வரை விரும்பிய பொருட்களை மனம்போல் வாங்க 'இந்தாண்டு எப்ப தான் ஆகஸ்ட் வருமோ, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை நடத்துமோ...' என ஏகத்திற்கும் எதிர்பார்த்து, வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மதுரை உட்பட தென் மாவட்ட மக்களை 'ஷாப்பிங்'கால் திணறடிக்க போகும் தினமலர் கண்காட்சி ஆக., 2 (வெள்ளி) துவங்கி ஆக., 5 (திங்கள்) வரை நான்கு நாட்கள் கோலாகலத்துடன் நடக்கிறது.
கண்காட்சியில் ஆச்சரியப்பட வைக்கும் பல அதிசயங்கள் காத்திருக்கு மக்களே. குடும்பத்தோட ஜாலியாக வாங்க, குதுாகலமாக ஷாப்பிங் செய்யுங்க, வாங்கும் பொருட்களுடன் அதிர்ஷ்டத்தையும் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
மேஜிக் மெகந்தி இலவசம்
கண்காட்சியில் நம் மாவட்ட ஸ்டால்களுடன் வெளிநாடு, வெளி மாநிலத்தை சேர்ந்தவை என 250 ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. அனைத்தும் குளிரூட்டப்பட்டவை. உள்ளே நுழைந்தால் 'இது நம்ம மதுரையா...' என ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஹைடெக் மெகா ஷாப்பிங் உலகத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படும்.
இளம் பெண்களே... நீங்கள் விரும்பும் ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனம், பேன்ஸி பேக்ஸ், கலை நயமிக்க டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், பாரம்பரிய சேலை ரகங்கள் என நீங்கள் விரும்பியதை மனம்போல் வாங்கலாம். உங்கள் அழகான வளைக்கரங்களுக்கு மேலும் அழகூட்டும் வகையில் அட்டகாசமான டிசைனர் மெகந்தியை இலவசமாக வரையலாம். இளைஞர்களுக்கான ரெடிமேட் சர்ட், டிசர்ட், பேன்ட் உள்ளிட்ட ஆடைகளும் அட்டகாசமான தள்ளுபடி விலைகளில் கிடைக்கும்.
தள்ளுபடி, இலவசம் சாம்பிள்
கண்காட்சின்னா வெறும் பொருட்களை மட்டும் தான் வச்சிருப்பாங்கனு நினைக்க வேண்டாம். கடல் மாதிரி கடைகள் விரிந்து பரந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் போன், அலங்கார மின் விளக்குகள், கொசு வலை என எந்த பொருட்களும் வாங்கலாம். தள்ளுபடி, இலவசத்தோடு சாம்பிள் பொருட்களும் அள்ளி தருவாங்க.
புட்கோட்ல சுவைக்கலாம் வகை வகை உணவுகள்
ஷாப்பிங் செய்து சோர்ந்துவிட்டால் கவலைப்பட வேண்டாம். புட்கோட்ல வகை வகை உணவுகள் கிடைக்கும். மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிங்கர் பிஷ், பிஷ் பிரை என வகை வகை உணவுகளை ருசிக்கலாம். ஸ்டால்களில் ரெடி மிக்ஸ் போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு மாவு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி என குழந்தைகளும் சுவைக்க ஏராளமாய் கிடைக்கும்.
குதுாகலப்படுத்தும் போத்தீஸ் கேம் ேஸான்
கண்காட்சியில் குட்டீஸ்கள் அதிகம் விரும்பும் போத்தீஸ் கேம் ஸோன் களைகட்டும்.
ஷாப்பிங் வருவோரே... உங்கள் குழந்தைகளுக்கு பேட்டரி கார், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், வாட்டர் ரோலிங், ஹேப்பி பன் சிட்டி, பலுான் சூட்டிங் என பல விளையாட்டு அம்சங்கள் காத்திருக்கின்றன. அவற்றில் உங்கள் குட்டீஸ்களை விளையாட வைப்பதன் மூலம் அவர்களின் மழலை முகத்தில் மகிழ்ச்சி பொங்க கேரண்டி தருகிறோம். ஸ்டால்களில் குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்களும் வாங்கலாம். வண்ண வண்ண பலுான்கள் இலவசமாக கிடைக்கும்.
டூவீலர், கார் பார்க்கிங் வசதி, மருத்துவ உதவி என தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி., கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
ஷாப்பிங்குக்கு தேவையான அத்தனை ஆச்சரியங்களும் ஒரே இடத்தில் கொட்டிக்கிடக்கும் இக்கண்காட்சியின் முதல் நாளை மட்டுமல்ல ஒவ்வொரு நாளையும் தவற விடாதீங்க மக்களே. ஒவ்வொரு நாளும் ஆனந்தமாய் வாங்க. குழந்தைகளுடன் ஆர்வமாய் பார்வையிடுங்க, குதுாகலமாக ரசிச்சு, ருசிச்சு விரும்பிய பொருட்களை அள்ளிட்டு போங்க. இது உங்கள் கண்காட்சி; உங்களுக்கான கண்காட்சி. வாங்க மக்களே.
இணைந்து கரம் சேர்ப்போர்: அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அன்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட். ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.