/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடுஆடியில் அம்மனுக்கு ஆடிப்பணியாரம்
/
நடுஆடியில் அம்மனுக்கு ஆடிப்பணியாரம்
ADDED : ஜூலை 31, 2024 04:26 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி வட்டார கிராமங்களில் ஆடி மாத குலதெய்வ வழிபாட்டுக்காக நடு ஆடியையொட்டி சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையல் செய்து வழிபாடு நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதியில் ஆடிமாதத்தை தலையாடி, நடு ஆடி, கடைசி ஆடி என 3 ஆக பிரித்து கொண்டாடுகின்றனர். புது மணத் தம்பதியரை ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் நிகழ்வு, ஆடி 18 ல், பதினெட்டாம் பெருக்கு என நிலங்களில் விதைப்பு பணி செய்தல் என சாகுபடி பணிகள் நடக்கும் மாதமாக கொண்டாடுகின்றனர்.
விவசாய பணிகளை செய்ய உடலுக்கு வலு சேர்க்கும் விதமாக மூன்று ஆடிகளிலும் அசைவ உணவு சமைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. உசிலம்பட்டி அருகே ஆனையூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மனுக்கு நடு ஆடி நாட்களில் பணியாரம் தயாரித்து படையல் செய்து வணங்கும் வழக்கம் தொடர்கிறது. இதற்காக சீலைக்காரியம்மன் கோயில் முன்பு நேற்று பணியாரம் தயாரிப்பு பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
ஆனையூர் முத்துலட்சுமி கூறுகையில், ''காலம் காலமாக நடுஆடிக்கு முதல் நாள் இரவு சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு நடத்துவோம். இரவில் படையலிட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் உண்போம். தை மாத பிறப்பில் கருப்பட்டி படையல், சித்திரையில் பொங்கல் வைத்து படையல் என பாரம்பரியமாக சீலைக்காரியம்மனை வழிபடுகிறோம் என்றார்.