ADDED : ஆக 22, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் கீழத்தெரு நடுச்சந்து பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது. எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா திறந்து வைத்து கூறுகையில், ''சுற்றுலாத் தலமான திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. கோயில் தீர்த்த பகுதிகளை பாதுகாக்க சட்டசபையில் பேச உள்ளேன்'' என்றார்.
அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா பங்கேற்றார்.