ADDED : ஜூன் 04, 2024 06:33 AM
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் கோடை காலங்களில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல கல்லுாரி விடுதி மாணவர்களை ஆற்றல்படுத்த மாணவர்கள் சமூகத்தில் களமாடிட வேண்டும் என்ற நோக்கத்தோடு 'களமாடு' எனும் தலைப்பில் 6 நாட்கள்சிறப்பு முகாம் துவங்கியது.
ஜூன் 3 முதல் 8 வரைநடக்கும் இம்முகாமில்நாட்டுப்புற கலைகள்,ஊடக கலைகள், மின்னணு ஊடக கலைகள், புத்தக வாசிப்பு திறன் மூலம் தன்னை முன்னிலைப்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செலின் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாற்று மையத்தின் இயக்குநர் காளீஸ்வரன் முகாமின் நோக்கம் குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, முன்னாள் மாநில நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செந்தில்குமார் பேசினர்.
மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் சரவணன்,அப்பு, விஜயகுமாரி முன்னிலையில் மாவட்ட மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.