/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பஞ்ச கன்னியரை தினமும் வழிபட வேண்டும் இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
/
பஞ்ச கன்னியரை தினமும் வழிபட வேண்டும் இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
பஞ்ச கன்னியரை தினமும் வழிபட வேண்டும் இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
பஞ்ச கன்னியரை தினமும் வழிபட வேண்டும் இந்திரா செளந்தர்ராஜன் பேச்சு
ADDED : ஏப் 27, 2024 04:56 AM
மதுரை: பஞ்ச கன்னியரை தினமும்வழிபட வேண்டும் என எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசினார்.
மதுரை ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் மாதாந்திர அனுஷ விழா நடந்தது. இதில் குருமகிமை எனும் தலைப்பில் அவர் பேசியது:
பஞ்ச கன்னிகைகள் எனப்படுபவர்கள் அகலிகை, சீதை, மண்டோதரி தாரை, திரௌபதி ஆகியோர். இவர்கள் ஐவரும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் அல்ல.
அகலிகையை பிரம்மா தன் சக்தியால் படைத்தார். ஜனகன் நிலத்தை உழும் போது சீதனமாக கிடைத்தவள் சீதை. திரெளபதி துருபதனின் யாக நெருப்பில் பிறந்தவள். மண்டோதரி தவளையாக பிறந்து, சிவனருளால் பெண்ணாக உருமாறியவள். பாற்கடல் கடையப் பட்ட போது மகாலஷ்மி யோடு வெளிப் பட்டவள் தாரை.
இவர்கள் ஒவ்வொருவரும் பெண்மைக்கும், கற்புக்கும், தாய்மைக்கும் உதாரணங்களாக திகழ்ந்தவர்கள். எவ்வளவு துன்பங்கள் வந்த போதும் அதை தாங்கி தன்னிலை கெடாமல் வாழ்ந்து காட்டியவர்கள். இவர்களை நாம் சக்தி அம்சங்களாக கருதி வணங்குதல் நமக்கு எல்லா நலன்களையும் தரும்.
தினமும் உறங்கச் செல்லும் போதும் கடவுளுக்கு நன்றி கூறி இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வத் தோடு இந்த பஞ்ச கன்னிகைகளை மனதார வழிபடுவது உயர்வை தரும்.
சீதை நிலத்தின் அம்சம், திரவுபதி நெருப்பின் அம்சம், அகலிகை ஆகாய அம்சம். தாரை காற்றின் அம்சம். மண்டோதரி நீரின் அம்சம்.
இவர்கள் மணமானவர்கள். இவர்களை எப்படி கன்னி என்று கருத முடியும் என்று சிலருக்கு தோன்றலாம். இவர்கள் காமத்தால் நம்போல பிறவாதவர்கள். நமக்கான இலக்கணங்கள் இவர்களுக்கு பொருந்தாது. இவ்வாறு இந்திரா சௌந்தர் ராஜன் பேசினார்.
ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர். டி. ராமசுப்பிரமணியன், நிர்வாகிகள் எல். வெங்கடேசன், வெங்கட்ரமணி. ராதாகிருஷ்ணன், சங்கரராமன் செய்திருந்தனர்.

