/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரியில் விதைப்பு பணி துவக்கம்
/
மானாவாரியில் விதைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 18, 2024 03:56 AM

பாலமேடு : பாலமேடு பகுதியில் சமீபத்திய தொடர் மழையால் மானாவாரியில் விதைப்பு பணிகளை விவசாயிகள் துவக்கினர்.
இப்பகுதியில் ஆடிப்பெருக்கில் பருத்தி, கடலை, மொச்சை பயறு வகைகளை விதைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். 'பருவமழை தாமதமான நிலையில் ஆடி கடைசியில் விதைப்பு பணியை துவங்கி உள்ளோம். மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்த காலம் போய்விட்டது. கிடைக்கும் மழையை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக' விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயி மச்சராணி: ஆடிப்பட்டத்தில் விதைக்க காத்திருந்தோம். கடந்த மாதம் ஒரு மழை பெய்தது. அதை நம்பி மற்றொரு பகுதியில் விதைத்த கடலை பயிர் மழையின்றி போதிய வளர்ச்சி அடையவில்லை. தற்போது தொடர் மழை பெய்வதால் விதைப்பு பணிகளை துவங்கி உள்ளோம். விளைச்சல், விலையை எதிர்பார்த்து சாகுபடி செய்யவில்லை. நிலத்தை தரிசாக விடக்கூடாது என்பதற்காகவே கடலை சாகுபடி செய்கிறோம் என்றார்.

