/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரிங்ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
/
ரிங்ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 31, 2024 05:28 AM
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே ரிங் ரோடு பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அவனியாபுரத்திலிருந்து வைக்கம் பெரியார்நகர், கரிசல்குளம், விராதனுார் பகுதிகளுக்கு செல்வோர் ரிங் ரோட்டை கடந்து செல்ல வேண்டி உள்ளது. அப்பகுதியில் தனியார் மகளிர் கல்லுாரியும் உள்ளது. ரிங் ரோட்டில் 24 மணி நேரமும் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது. அவனியாபுரத்தில் இருந்து செல்வோர் ரிங் ரோட்டை கடக்க மிகுந்த சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் பயத்துடன் செல்கின்றனர்.
மேலும் அவனியாபுரத்தில் இருந்து திருமங்கலம், வலையங்குளம், சிந்தாமணி, விரகனுார், மாட்டுத்தாவணிக்கும் ஏராளமானோர் சென்று திரும்புகின்றனர். அவர்களும் ரிங்ரோட்டை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.