ADDED : ஜூலை 17, 2024 12:49 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : சோழவந்தான் அருகே இரும்பாடி கண்மாய் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். போர்மேன் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். மின்மாற்றியை தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி இயக்கி வைத்தார். கிளைச் செயலாளர் செந்தில்குமார், நிர்வாகி ஞானசேகரன் பங்கேற்றனர். இக்கிராம பகுதியில் ஏற்கனவே 9 மின்மாற்றிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் கூடுதலாக விவசாய மோட்டார்களுக்கு மின் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் புதிதாக மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
