ADDED : மார் 04, 2025 05:08 AM
மதுரை: மதுரைக் கல்லுாரி வளாகத்தில் டி.வி.எஸ்., ஐ.டி.எப்., அமைப்புகள் சார்பில் சர்வதேச ஜூனியர் பிரிவு ராங்கிங் டென்னிஸ் போட்டிகள் நேற்று துவங்கியது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டி முடிவுகள்:
லெத்தீஸ் கோம்பிலா 6-2, 2-6, 11-9 செட்களில் பாவக் சித்தானியாவை வீழ்த்தினார். அமெரிக்காவின் நிகித் கோரிசெட்ரு 6-3, 6-2 செட்களில் அனுரவ் பிரகாஷை வீழ்த்தினார். யஷஷ் ராஜ் தலகட்புரா அம்ருத்ராஜ் 6-7(7), 6-4, 10-2 செட்களில் அதர்வா ஸ்ரீராமோஜ்வை வீழ்த்தினார்.
சரண் சோமாசி 4-6, 6-1, 10-5 செட்களில் சாய் கரண் அங்கமுத்துவை வீழ்த்தினார். ஆர்யன் போகத் 6-2, 6-1 செட்களில் அபிநவ் மோனிகுட்டனை வீழ்த்தினார். ஸ்ரீரேயாநாத் மகந்தசே 6-4, 6-4 செட்களில் ஸ்ரேயாஸ் நரேந்திரனை வீழ்த்தினார். நிதிக் சிவக்குமார் 6 - 2, 6 - 0 செட்களில் சாத்விக் சந்தோைஷ வீழ்த்தினார். நியந்த் பத்ரி நாராயணன் 6 - 3, 6 - 0 செட்களில் ஸ்ரீ சாய் சத்யராம் ஹரிவன்ஸ் மைகாபுலாவை வீழ்த்தினார்.
பெண்கள் போட்டி முடிவுகள்
இன்ஷியா மவ்வாலா 5-7, 6-2, 10-6 செட்களில்அக்ஷிதா அன்டிலை வீழ்த்தினார். ஆரோஹி விஜய் தேஷ்முக் 6-3, 7-5 செட்களில் தீப்தி வெங்கடேசனை வீழ்த்தினர். ஐஸ்வர்யா 6-0, 6-0 செட்களில் அலீனா மரிய மனோஜை வீழ்த்தினார். ஜானவி சவுத்ரி 7--5, 6-4 செட்களில் லாவண்யா திவாரியை வீழ்த்தினார். மோடி ஹேமாக்ஷி மயூர் 6-3, 6-4 செட்களில் அருணிமா ராயை வீழ்த்தினார். தேவன்ஷி பிரபு தேசாய் 6-4, 4-6, 10-7 செட்களில் அமெரிக்காவின் மித்ரவிண்டா சதீைஷ வீழ்த்தினார். ஜானவி சவுக்லே 3-6, 6-3, 10-4 செட்களில் பூஜா நாகராஜை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நிதிக் சிவக்குமார், மகளிர் பிரிவில் ஆரோஹி விஜய் தேஷ்முக் இருவரும் இறுதி தகுதிச் சுற்றுக்கு முன்னேறினர். போட்டிகள் மார்ச் 8 வரை நடக்கிறது.