
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை பொருளாதாரத் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. சீனாவின் குவான்ங் மின்சு பல்கலை பேராசிரியர் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். துறைத் தலைவர் முத்துராஜா தலைமை வகித்தார்.
தொழில்துறை புரட்சி 4.0, நிலையான வளர்ச்சிக்கான குறிக்கோள்கள், தொழில்துறை வளர்ச்சியில் இளைஞர்கள் திறனும் தொழில் நுட்பமும் எவ்வாறு பங்கு வகிக்கிறது, நிலையான வளர்ச்சிக்கான குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் தொழில்துறைக்கும் தொழில்நுட்பத்துக்கும் உள்ள பங்கு குறித்து ஜெயராஜ் பேசினார். பேராசிரியர் ஷீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.