ADDED : மே 30, 2024 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யாதவர் கல்லுாரியில் இளங்கலை வணிக நிர்வாகவியல் துறை படித்த 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐதராபாத் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன உத்தரவுகள் வழங்கும் விழா முன்னாள் தாளாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
செயலாளர் கண்ணன், முதல்வர் ராஜூ, சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால், பாடத்திட்ட குழு தலைவர் அழகப்பன், உதவி தேர்வாணையர் உதயகுமார், வளாக வளர்ச்சிக்குழு தலைவர் கருப்பணழகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். துறைத் தலைவர் சந்திரலேகா ஏற்பாடு செய்தார்.