/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயில்களுக்கு இலவச மின்வசதி வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஜூன் 03, 2024 03:19 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், கிராம கோயில் பூஜாரிகள் பேரவை, அருள் வாக்கு அருள்வோர் பேரவை, பூ கட்டுவோர் பேரவை சார்பில் கருமாத்துார் பேச்சி விரும்பன் கோயிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணைப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிர்வாகிகள் வேலுமணி கணேசன், ராமர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் மலைச்சாமி, பொருளாளர் ரமேஷ்பாபு பேசினர்.
கூட்டத்தில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் ஜூன் 23 முதல் ஜூலை 7 வரை பூஜாரிகளுக்கு இலவச பயிற்சி நடக்க உள்ளது. பூஜாரிகள், கோடாங்கிளுக்கு இலவச பஸ் பாஸ், கிராம கோவில்களுக்கு இலவச மின் இணைப்பு, பென்ஷனை உயர்த்தி வழங்க வேண்டும். பூ கட்டுவோர், கோயில் பூஜாரிகளுக்கு வங்கி மூலம் ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.