ADDED : ஜூலை 15, 2024 04:07 AM
அ நிறம் | அளவு
மதுரை, : மதுரை மத்திய சிறையில் நேற்று அதிகாலை 5:40 மணி முதல் 7:40 மணி வரை போலீசாரும், சிறை காவலர்களும் சோதனை மேற்கொண்டனர்.
சிறை டி.ஐ.ஜி., பழனி, துணைகமிஷனர்கள் கருண்கரட், மதுகுமாரி, சிறை எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் தண்டனை, விசாரணை கைதிகளின் அறைகளில் சோதனை நடந்தது. தடை செய்த பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. ஓராண்டுக்குப் பின் நடந்த இச்சோதனையில் போலீஸ் தரப்பில் 120 பேர், சிறை தரப்பில் 80 பேர் பங்கேற்றனர்.
