/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
சக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
சக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
சக்குடியில் இன்று ஜல்லிக்கட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 08, 2025 03:35 AM

மதுரை : சிவகங்கை மாவட்டம் முனியாண்டிபுரம் பாண்டிராஜ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாவட்டம் சக்குடியில் இன்று (மார்ச் 8) ஜல்லிக்கட்டு நடக்கிறது. எனது காளை பங்கேற்க ஒருங்கிணைப்பாளரிடம் டோக்கன் கோரினேன். நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் மறுக்கப்பட்டது. அருகிலுள்ள சில கிராமங்களை சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினரின் காளைகளுக்கும் டோக்கன் வழங்கவில்லை.
இது பாகுபடுத்தும் வகையில் உள்ளது.
ஒருங்கிணைப்பாளரான குறிப்பிட்ட தனிநபர் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுதாரர் காளை பங்கேற்க டோக்கன் வழங்க வேண்டும். இதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.